சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவன் கடுமையான முதுகுவலி மற்றும் கால் வலியால் அவதியுற்று ஜெனீவா பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அங்குள்ள மருத்துவர்கள் அவனுக்கு தொற்றுநோய் அல்லது மரபியல் நோய் ஏதாவது உள்ளதா? என பரிசோதித்துள்ளனர். அப்பொழுது அவனது கால் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதனையில் அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஸ்கர்வி என்னும் நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்கர்வி நோய் வைட்டமின் C குறைபாடு காரணமாக உருவாகும் பிரச்சினையாகும். இதற்கான விடயம் என்னவென்றால், அந்தச் சிறுவன் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண மறுத்துள்ளான். ஆகவே, அவனுக்கு வைட்டமின் C குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவனுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவன் நடக்கத் துவங்கியுள்ளதுடன், அவனது வலியும் மாயமாக மறைந்துவிட்டது என்பதுதான். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்லியுள்ளார்கள் மருத்துவர்கள். இதற்கிடையில், முன்னேற்றமடைந்த உலகில் ஸ்கர்வி நோய் அபூர்வம் என்பதால், அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள்.