ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், சண்டை நடந்தா தல தெறிச்சு ஓடுற கூட்டம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ, இடத்துல நடந்திருக்கு. சண்டை என்றால், சண்டையை நோக்கி ஓடுகின்ற கூட்டம் பச்சை தமிழகத்தை சார்ந்த எங்களுடைய வீர வரலாறு, புறநானூறை நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றால் திரும்ப படிங்கள். நீங்கள் வள்ளுவரின் சில வார்த்தைகளை மட்டும் சீன எல்லையில் சொல்லிவிட்டு, சீனாவின் உடைய பெயரை கூட சொல்லாமல், ஐநா சபையில் எங்களுடைய மொழியின் பழமையை சொல்லிட்டு இருக்கீங்க. எங்க புறநானூறை படிங்க..
அரசன் முரசு அறைந்த உடன் தந்தையை போருக்கு அனுப்பினான். பேரன் செத்துப் போறான், மறுபடியும் அரசன் உடைய ஆணை வீட்டிற்கு ஒருவன் வேண்டுமென்று, கணவனே அனுப்புறான். இறுதி யுத்தம் மீண்டும் ஆட்கள் தேவை என்று சொன்னதும், அவன் போய் பதுங்கி இல்லை, அழுது முடங்கி இல்லை. பச்சிளம் மாறாத தன்னுடைய பாலகனை அழைத்து, குளிப்பாட்டி கையில் வேலை கொடுத்து,
சாலையில் சாரைசாரையாக போய்க் கொண்டிருக்கிற அந்த தமிழர் படையில், தன்னுடைய மகனை அனுப்பி அவன் போருக்கு போகும் அழகை பார்த்து, போய் வா மகனே, எதிரி அம்பு விட்டால் நீ புற முதுகை காட்டாதே, நெஞ்சிலே தாங்கி, இந்த மண்ணை காத்து, மானத்தை மீட்டு வா. அல்லது வீர மரணம் அடை என்று சொல்லி அனுப்புன, அந்த புறநானூற்று தமிழர் நிலம்… நீங்கள் அத்துமீறினால் யுத்தம் செய்ய இன்றும் காத்திருக்கிறது, நாளையும் காத்திருக்கின்றது என்பதை எச்சரிக்கையோடு சொல்லி விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.