Categories
மாநில செய்திகள்

“அதை நினைச்சா இன்றும் உடல் நடுங்குது”…. பேரவையில் பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நேற்று சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது  “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி ஆகும். அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. துயரம் மற்றும் கொடூரமான அச்சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனே தூத்துக்குடிக்குச் சென்றேன்.

துப்பாக்கிச்சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக்கொண்டிருந்த காட்சியானது இன்றும் எனது மனதை வாட்டுகிறது. துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதிசெய்து அறிக்கை கொடுத்து இருக்கிறது. அந்த சம்பவத்தில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் துடிக்கத்துடிக்க பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் 40 பேர் படுகாயங்கள் அடைந்தனர். மேலும் 64 பேர் சிறிய அளவிலான காயங்கள் அடைந்தனர். சென்ற அ.தி.மு.க ஆட்சியின் அன்றைய முதல்வர் பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் நடந்துள்ளது.

கேட்பவர் அனைவருக்கும் இரத்தம் உறைய வைக்கும் இச்சம்பவம் பற்றி, அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது. உங்களைப் போன்று நானும் டி.வி. பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன் என பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சட்டஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும். அத்துடன் யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் கண்டிப்பாக கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்று பேசினார்.

Categories

Tech |