Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷூட்டிங் போகுறது இருக்கட்டும் எப்ப கதை சொல்லுவீங்க” பிரபல இயக்குனரை கலாய்த்து படத்தை உறுதி செய்த SK…..!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்”. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ஆம் தேதி (அதாவது நாளை ) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்து வருகின்றார். அப்போது எதிர்பாராத விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதில், “நம்ம எப்போ சார் ஷூட்டிங் போலாம்? அப்புறம் நம்ம அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறியதாவது, “ஷூட்டிங் எப்போவேணாலும் போலாம் சார். ஆனா இந்த கதை எப்ப சார் கேட்கலாம். அதேமாதிரி அந்த படத்துல பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்” என்று பதிலளித்தார். நடிகர் சிவகார்த்திகேயன் ஜாலியாக வெங்கட் பிரபுவை கலாய்த்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இவர்களின் இந்த உரையாடல் அடுத்த படத்தில் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

Categories

Tech |