உலக நாடுகளில் தற்போது பிஎஃப் 7 வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வாரம் தீபாவளி பண்டிகை இந்தியாவில் தொடங்க இருப்பதால் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதோடு, முக கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களிடம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என மத்திய மந்திரி சுகாதாரத் துறை செயலாளர்களிடம் மத்திய மந்திரி கூறியுள்ளார்