வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவு நீர் பாதைகளை இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளர் தான் அதற்கு பொறுப்பாவார். இந்நிலையில் இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் 14420 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.