Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்! மாணவர்களுக்கு ஒரு அரியவாய்ப்பு…. இலவச ஸ்கூட்டர் பெறணுமா?… மாநில அரசு அதிரடி….!!!!!

அசாமில் நல்ல படிக்ககூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர்கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்குவதற்கு அரசு முடிவுசெய்து இருக்கிறது. அந்த வகையில் தகுதிவாய்ந்த 35,800 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12-வது வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

இதற்குரிய முடிவானது கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெறும். அதாவது காம்ரூப் மாவட்டத்திலுள்ள காம்ரூப் பெருநகரில் நிகழ்ச்சி நடத்தப்படும் என அசாம் மந்திரி ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார். இதற்கென மொத்தம் ரூ.258.9 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Categories

Tech |