Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. தீப்பற்றி எரிந்து இடிந்த பிரம்மாண்ட மசூதி… பதற வைக்கும் வீடியோ…!!!

இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்மாண்டமான மசூதி புதுப்பிப்பு பணி நடந்த சமயத்தில் தீப்பற்றி இருந்ததில் இடிந்து விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தோனேசிய நாட்டின் ஜகர்த்தா நகரத்தில் அமைந்திருக்கும் மிகப்பிரம்மாண்ட மசூதியில் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போது, திடீரென்று அந்த மசூதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீப்பற்றி எரிந்தவுடன் அந்த பகுதியே ஒட்டுமொத்தமாக புகை மூட்டமாக மாறியது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |