திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1437 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது
இந்நிலையில் நாளை முதல் அக்.,23 வரை சென்னையில் இருந்து டூ வீலர், கார் மூலம் வெளியூர் செல்பவர்கள், தாம்பரம், பெருங்குளத்தூர் பாதையை தவிர்க்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். தீபாவளிக்காக, நாளை முதல் 23ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனவே, அவர்கள் திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.