பால்கோவா செய்ய தேவையான பொருள்கள்:
பால் – 2 லிட்டர், சர்க்கரை – 1 கப்/ 200 கிராம், எலுமிச்சம் பழம்-1, ஏலக்காய் பொடி- ½ தேக்கரண்டி, நெய் – 1 தேக்கரண்டி.
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு பாலை சேர்த்து சூடாக்க வேண்டும். பால் அடி பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கிளறி விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் சுண்டி பாதி அளவாக ஆகும் வரை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து அதனுடன் சேர்க்க வேண்டும். பால் இப்போது திரிந்து வருவதை பார்க்க முடியும். பால் பிரிந்த பிறகு, 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும்.
ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு பால் சுண்டி திரண்டு வருவதை காண முடியும். அதன்பின் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளற வேண்டும். இதனையடுத்து பால்கோவா ஒன்றாக சேர்ந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவ வேண்டும். மேலும் நெய் தடவிய பாத்திரத்தில் பால்கோவாவை போட்டு, ஒரு கரண்டியால் அழுத்தி விட வேண்டும். அதன்பின்னர் 6 முதல் 8 மணி நேரங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். இதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பரிமாறினால் சுவையான பால்கோவா ரெடி.