பிரித்தானியாவில் 1943-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள cornwall என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் 1943-ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் ரிலாக்ஸ் செய்வதை காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் கடற்கரையில் உள்ள கூட்டத்தின் நடுவேன் கோட் சூட் அணிந்த ஒருவர் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருப்பது போல் உள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட பலர் அப்படியானால் டைம் ட்ராவல் என்பது உண்மைதான் போலும், பாருங்கள் எதிர்காலத்தை சேர்ந்த ஒருவர் மொபைல் போன் இல்லாத காலத்திற்கு சென்று மொபைல் போனை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
ஆனால் வேறு சிலர் அது மொபைல் போன் இல்லை அவர் சிகரெட்டைத்தான் சிகரெட் பெட்டியின் மீது உருட்டி கொண்டிருக்கிறார் என கூறியுள்ளனர். ஆனால் டைம் டிராவல் உண்மை என்பதை அந்த புகைப்படம் நிரூபித்து இருக்கிறதோ இல்லையோ 1940களில் பிரித்தானியா எப்படி இருந்தது, பிரித்தானியார்களின் உடை போன்ற விடயங்கள் எப்படி இருந்தது என்பதை அந்த படம் காட்டுவதை மறுப்பதில்லை.