Categories
உலக செய்திகள்

42 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெரிய மாற்றம்…. உச்சத்தை தொட்ட உணவுப் பொருட்களின் விலையால்…. மக்கள் கடும் அவதி….!!!!

உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அவதியில் உள்ளனர்.

பிரிட்டன் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. இது கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பால், வாழைப்பழம், பிரட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. அன்றாட செலவுகளை சந்திக்கவே தள்ளாடும் மக்களுக்கு இது பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது.

இது குறித்து பிரிட்டனின் நிதி மந்திரியிடம் கேட்டபோது “விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு அரசாங்கம் கண்டிப்பாக உதவிக்கரம் நீட்டும். மேலும் அனைவருக்கும் பொதுவான பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி கொடுப்பதே எங்களின் முக்கிய நோக்கமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |