கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 37 நாடுகளில் கொரோனா பரவி உயிர் பலி வாங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றது. ஆனாலும் கட்டுப்படுத்துவதற்கு திணறி வருகின்றது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வருகின்ற தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது என்றும், கொரோனா வைரசின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் கூறினர். மேலும் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பீட்டர் ஹோடெஸ் கூறியதாவது, நியூயார்க், டெக்ஸாஸ், ஹூஸ்டன் மற்றும் சீனாவில் கொரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இது ஒரு சவாலான காரியம் என்றும், அச்சுறுத்தலான பணி என்றும் தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமாக இருப்பதாகவும், உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.