Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை : ”காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சி தான் காரணம்” பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு …!!

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார்.

இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்த போது எதிகார்கட்சிகளை கடுமையாக சாடினார். அப்போது , டெல்லி வன்முறைக்கு காங்கிரஸும் , ஆம் ஆத்மி கட்சியும் தான் காரணம் . CAA போராட்டங்களை காங்கிரஸ் ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி தூண்டும் வகையில் நடந்து கொண்டனர். கையில் ஆயுதங்களுடன் ஆம்ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது. மக்களை தூண்டும் வகையில் சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடக்கின்றனர்.

Categories

Tech |