தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 21-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி
கருங்கல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், பள்ளியாடி, முருங்கவிளை, நட்டாலம், கருமாவிளை ஆகிய இடங்களிலும் மற்றும் அவற்றை சார்ந்த இடங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது என குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்
புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
திருப்பூர்
கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால் பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரித்துள்ளார்.