தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது.
இன்று 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் பேருந்துகளுடன் மேலும் சென்னையில் இருந்து 1437 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1765 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் மேலும் சென்னையில் இருந்து 1586 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2620 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 23ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 1195 சிறப்பு பேருந்துகளும் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1985 சிறப்புகளும் இயக்கப்படுகின்றன.
மூன்று தினங்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன் 10,588 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 16 ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.