Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு வேலை உறுதி….. ரூ7,00,000 மோசடி….. வாலிபர் கைது….!!

தூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை அடுத்த கூடம் பள்ளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அவரது உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தரும் டீலர்கள் குறித்து விசாரித்து வந்துள்ளார்.

அப்போது  கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்த கோயில்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார். இதை நம்பி ரூபாய் 7 லட்சம் ரொக்கத்தை ஜெயராமன் கொடுத்துள்ளார்.

ஆனால் எந்த அரசு வேலையும் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் நீண்ட நாட்களாக கோயில்ராஜ் ஏமாற்றி வர ஜெயராமன் ஆத்திரமடைந்து அவரிடம் பணத்தை திருப்பி கேட்கையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல் நிலையத்தில் புகாரளிக்க காவல்துறையினர் கோயில்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |