மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது. அப்படி கிடைக்காதவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் ஆவின் பாலில் புழு இருந்ததாக பெண் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவரின் தாயார் ஆவின் பால் வாங்கி காய்ச்சியுள்ளார். அப்போது அதில் புழு மிதந்துள்ளது. இதையடுத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தகவல் அறிந்த அதிகாரிகள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று பால் மாதிரிகளை எடுத்து சென்றுள்ளனர்.