Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது” குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு டப்பிங் பேசிய பிரபல நடிகை…. குவியும் பாராட்டு….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி நாயர். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சலி நாயர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் த்ரிஷ்யம் 2, அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜூ என்பவரை அஞ்சலி நாயர் 2-வதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஜூலை மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அஞ்சலி தான் நடித்து முடித்த ஒரு படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக தன்னுடைய கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு சென்றார். அங்கு தன்னுடைய குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே அஞ்சலி டப்பிங் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அஞ்சலி நாயர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் தன்னால் படத்தின் பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக குழந்தையுடன் வந்து வேலையை முடித்துக் கொடுத்த அஞ்சை நாயரை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |