Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! “PS-1” நடிகை அணிந்திருந்த புடவை ரூ. 4.80 லட்சமா…? அப்படி என்ன ஸ்பெஷல்….? இதோ நீங்களே பாருங்க…..!!!!

பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா. இவர் தமிழில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் சோபிதா ‘வானதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது மங்கி மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா உடன் தற்போது டேட்டிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அழகிய புடவையில் ஒரு போட்டோவை வெளியிட்டார். அந்த புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், அந்த புடவையின் விலையை தெரிந்து கொள்வதற்காக பலரும் இணையதளத்தில் தேடியுள்ளனர். ஆனால் புடவையின் விலையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அதாவது அந்த புடவையின் விலை  4,80,000 ரூபாயாம். மேலும் நடிகை சோபிதாவின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |