தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி,உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 15 ஆயிரத்து 525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.