தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரு நடிகையாக மட்டுமின்றி படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் நடிகை சாய் பல்லவியின் கார்கி திரைப் படத்தை தயாரித்தார். அதன் பிறகு தற்போது குமாரி என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
அதோடு பல படங்களில் நடிகையாகவும் கமிட்டாகி இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது அம்மு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசான நிலையில், தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் அம்மு திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த மயூரா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மு என்ற படத்தின் பெயரை பதிவு செய்துள்ளோம். அதன் பிறகு படத்தின் கதையை இயக்குனர் மணிவர்மாவால் தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பணிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக தொடங்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் அம்மு என்கிற தலைப்பில் படத்தை எடுத்து அதை ஓடிடி ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்துள்ளனர். எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், நீதிபதிகள் வழக்கை ஏற்றுள்ளனர்.
மேலும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், அம்மு ஒரு தெலுங்கு படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், தென்னிந்திய சங்கத்தில் பதிவு செய்து இருக்கும் தலைப்பு தெலுங்கு சினிமாவுக்கு பொருந்தாது என்று கார்த்திக் சுப்புராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.