மலையாள சினிமாவில் புலி முருகன் படத்துடன் மான்ஸ்டர் படத்தை ஒப்பிட வேண்டாம் இயக்குனர் வைசாக் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் புலிமுருகன். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் மலையாள படங்களின் பட்ஜெட்டும் வியாபார எல்லையும் விரிய ஆரம்பித்தது. இந்த புலி முருகன் திரைப்படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் வைசாக்.
இந்த புலிமுருகன் திரைப்படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இவர்கள் மூவரின் கூட்டணி மான்ஸ்டர் மூலம் திரும்பிவந்து இருப்பதால் ரசிகர்கள் புலி முருகன் படத்தை போன்றே இந்த படத்தையும் மாசாக எதிர்பார்க்கிறார்கள். இந்த திரைப்படம் இன்று வெளியாகயுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் வைசாக் ஒரு பேட்டியில் கூறியதாவது, “இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்த திரைப்படம் புலி முருகனுக்கு சமமாக இருக்குமா இல்லை புலி முருகனை விட மேலாக இருக்குமா என்பது போன்ற கேள்விகள் தான் அதிகம் வருகின்றது.
இதனை தொடர்ந்து புலிமுருகன் படத்துடன் இந்த படத்தை தயவுசெய்து ஒப்பிட வேண்டாம். மேலும் புலிமுருகன் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். ஆனால் மான்ஸ்டர் ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர். இந்த திரைப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் மட்டுமே உள்ளன. அதே சமயத்தில் இந்த இரண்டு சண்டைக்காட்சிகளும் மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத, இதுவரை யாரும் முயற்சித்த புதுமையான வகையில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படம் புலன் விசாரணை சம்பந்தமான படம் என்பதால் ரசிகர்கள் படம் துவங்கியதிலிருந்து சற்றே பொறுமையுடன் இந்த படத்துடன் பயணித்தால் பல அற்புதமான விஷயங்கள் அவர்களுக்காக இதில் காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார்.