இயக்குனர் பா. ரஞ்சித் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் நடிகர் பசுபதி இணைகின்றார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள் மற்றும் 10 என்றதுக்குள்ள போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். மேலும் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையிலும் பசுபதி நடிப்பில் கலக்கியுள்ளார். இதனை அடுத்து விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இந்த திரைப்படத்தில் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். கேஜிஎஃப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.