Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்…. அதிக கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் குறிப்பாக சென்னையில் இருந்து இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் சானிடோரியம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இருந்து புறப்படுகின்றன. மேலும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4246151, 044 2474 9002, 2628 0445, 2628 1611 ஆகிய எங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது

Categories

Tech |