தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக தன் மூன்றாண்டு பயண அனுபவம் பற்றி எழுதியிருக்கும் Rediscovering selfin selfless service என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவானது சென்னை கிண்டி லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசியதாவது “மக்களுடன் இருக்கும் வாழ்க்கைதான் தனக்கு வேண்டும். இதற்கிடையில் அரசியலில் நாகரிகம் இருக்கவேண்டும்.
எவ்வளவு உளிதாக்கினாலும் நான் சிலையாகத் தான் மாறுவேன். என்னை செதுக்கியவர்களை விடவும் ஒதுக்கியவர்கள் தான் அதிகம். ஆளுநரான தனக்கு அதிகாரம் இருந்தாலும், தனிவிமானத்தை ஒரு போதும் என் பயணங்களுக்கு நான் பயன்படுத்தியதில்லை. அத்துடன் சாப்பாட்டு பணத்தை கூட நான் தெலுங்கானாவில் செலுத்தி விடுகிறேன்.
இதனிடையில் எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது. எனினும் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என கூறிவிட்டேன். மதவேறுபாடு அரசியல்வாதிகளிடம் தான் உள்ளது. நான் பெரிய மருத்துவராக இருந்த நிலையில், என் வருமானத்தை விட்டு இன்று இப்பதவியில் இருப்பது மக்களுக்காகத் தான். அரசியலில் எப்போதுமே என் பங்கு இருக்கும்” என்று அவர் பேசினார்.