Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvWI : பௌலிங்கில் மிரட்டல்…. பிராண்டன் கிங் அரைசதத்தால் 146 ரன்கள் குவித்த விண்டீஸ்..!!

அயர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் குவித்தது.

கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டிஸ் அணியின் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இருவரும் களமிறங்கினர். இதில் மேயர்ஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அதன்பின் நல்ல தொடக்கம் கொடுத்த ஜான்சன் சார்லஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து வந்த எவின் லூயிஸ் 13, நிக்கோலஸ் பூரன் 13, ரோவ்மன் பவல் 6 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதற்கிடையே மிடில் வரிசையில் இறங்கிய பிராண்டன் கிங் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.. கடைசியில் கிங்குடன் ஓடியன் ஸ்மித் சற்று அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் குவித்தது. பிராண்டன் கிங் 48 பந்துகளில் (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) 62 ரன்களுடனும், ஓடியன் ஸ்மித் 19 (12) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 150 ரன்களை தாண்ட முடியவில்லை.. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கரேத் டெலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Categories

Tech |