திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் செல்லும் பேருந்துகள், மற்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் சாலையில் முதலைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்துடன் புதிய பேருந்து நிலையம் சில மாதங்களும் முன்பு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலையை பேருந்து நிலையத்துடன் இணைப்பதற்காக அணுகு சாலைகள் ரிங் ரோடு அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். தற்போது ரிங் ரோடுக்கான பணி நிறைவு நிலையில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
அதன் பிறகு செய்தியாளர்களும் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் அடிப்படையில் மிஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் நெம்மேலியில் 100 மில்லியன் லிட்டர் பயன்பாட்டில் உள்ளது. புதிதாக நெம்மேலியில் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் தருவது குறித்த திட்டம் ஓரிரு மாதங்களில் முடிவடைகிறது. சென்னை மாநகரத்தில் புதிதாக கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின்படி 400 மில்லியன் லிட்டர் வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இயற்கையாக செய்யக்கூடிய மழை நீரை தேக்கும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரியை போல சென்னையில் மிக பெரிய ஏரியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். சென்னையில் 35 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை செய்ய சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு, தினந்தோறும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் திமுகவின் பீ டிம்மாக செயல்படுவதாக கூறிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், திமுக தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.