Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சிலிண்டர் குண்டுவெடிப்பு – புதிய பரபரப்பு தகவல்கள் …!!

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடித்து வழக்கில் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோவை ஐந்தாவது நடுவர் நீதிமன்றத்தில் உக்கடம் காவல் துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளது.

அதில் கோவிலுக்கு அருகில் வசித்த அப்துல் மஷீத் என்பவர் வீட்டில் ஒரு மாதம் முன்பு வரை  ஜமேசா மொபின் வாடகைக்கு தங்கி உள்ளார். இந்த அப்துல் மாசித் என்பவர் அவர்தான் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

மேலும் 22 ஆம் தேதி வெடிபொருட்களை காரில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் சிக்குள்ளது என்றும் காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரை மூன்று நாள் காவல் எடுத்து விசாரணை நடசத்திய போலீஸ் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |