Categories
தேசிய செய்திகள்

“இதை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை”…. நீட்டிக்கப்படும் போது சுகாதார அவசரநிலை…. தகவல் வெளியிட்ட WHO….!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீன நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது இன்றளவும் உலகை விட்டு பொழியாமல் இன்னும் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இருப்பினும் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இந்நிலையில் பொது சுகாதார நிறுவனம் இந்த நோய் தொற்று இன்னும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாகவே நீடிக்கிறது என அறிவித்துள்ளது . அதாவது இது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை என்பதாகும்.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசர குழு கூறியதாவது “வேறு சில சுவாச வைரஸ்களுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸின் தாகம் மிக அதிகமாகவே உள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளும் அதிகம் தான். அதுமட்டுமல்லாமல் கொரோனா தொடர்பான சிக்கல்கள் கொரோனாவுக்கு பிந்தைய நிலைகள் அதன் தாக்கங்கள் எல்லாம் இன்னும் சரிவர புரிந்து கொள்ளப்படாமல் இருக்கின்றது” என கூறி இருக்கிறது.

Categories

Tech |