மியான்மர் நாட்டில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அந்நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங் சான் சுகி உள்ளிட்ட பலரை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் கடும் அடக்கு முறையை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டிலுள்ள மாகாணத்தில் 46 வயதுடைய பள்ளி ஆசிரியரான சா டுன் மொய் என்பவர் ராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவத்தினர் சான் டு மொய்யை ஒரு வருடமாக மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து பொதுமக்களின் முன்னிலையில் ஆசிரியரின் தலையை துண்டித்து பள்ளியின் கேட்டு தொங்கவிட்டு சென்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.