Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வாகனங்களிலும்…. இனி இதெல்லாம் கட்டாயம்…. முக்கிய உத்தரவு…!!!

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறைச் செயலாளர் அவர்களால் வெளியிடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்ட நிலையில் இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |