அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் பகுதியில் ராணுவ தலைமையகத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம்போல் ரோந்து பணிக்கு சென்றுள்ளது. மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அப்பர் சியாங் மாவட்டம் டுட்டிங் தலைமையகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து அந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் சென்றனர்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
Categories