Categories
பல்சுவை

காதலியை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்த இளைஞர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இளைஞர் ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈபிள் டவர் முன், தனது காதலியை கவரும் விதமாக நடனமாடிக் கொண்டு காதலை தெரிவிக்கும் வீடியோவானது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ஈபிள் டவர் அருகில் ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் “Marry Me” என அலங்கரித்து, சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடனமாடிக்கொண்டு தனது காதலிக்கு காதலை தெரிவித்து இருக்கிறார்.

இந்நிகழ்வு அவரின் காதலி உட்பட அங்கிருந்த அனைவரையும் கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஸ்வீட் ப்ரோபோசல் எனவும் முன்கூட்டியே திட்டமிட்டு அந்த இளைஞர் செயல்பட்டிருக்கிறார் எனவும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |