Categories
தேசிய செய்திகள்

திக் திக் திக்!…. ஓடும் ரயிலில் தீ விபத்து… நொடியில் தப்பிய 150 பயணிகள் உயிர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசா மாநிலம் பத்ரத்-காரக்பூர் இடையிலான பறக்கும் ரயில் பஹானாக ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது அந்த ரயிலின் கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. புகை வெளியேறுவதை கண்ட அதிகாரிகள் உடனடியாக அந்த ரயிலை நிறுத்த ஓட்டுநருக்கு உத்தரவிட்டனர். இதனை அடுத்து அந்த ரயில் நிறுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில், ரயிலுக்குள் இருந்த 150 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே குதித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் பலரை ரயில்வே அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்‌ கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினர். இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது, கடைசி பெட்டியில் ஏற்பட்ட தீ இரண்டாவது பேட்டி வரை பரவியது. உரிய நேரத்தில் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் தீயை முழுவதுமாக அணைக்கும் வரை பஹனாகா ரயில் நிலையத்திற்கு அனைத்து ரயில்களும் புறநகரில் நிறுத்தப்பட்டது. தற்போது விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |