Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?…. அப்போ உடனே இத பாருங்க…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனால் அனைத்து மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே தீபாவளிக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பண்டிகை காலத்தில் மக்களின் வசதிக்காக கூடுதல் எண்ணிக்கையிலான பேருந்து மற்றும் ரயில்களை இயக்குவது வழக்கம்.

அவ்வகையில் சென்னையில் இருந்து திருச்சி,திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரம் போன்ற மாவட்டங்களுக்கு பயணிக்க மக்களுக்காக மூன்று சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் அக்டோபர் 23ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு திங்கட்கிழமை காலை 11 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

திருச்சியில் இருந்து நாளை 2.15 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பி இரவு 7 மணிக்கு சென்றடையும். தாம்பரத்திலிருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்றடையும்.இதனைப் போலவே மறு மார்க்கத்திலும் தீபாவளி முடிந்த பிறகு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |