Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த பட டீசர்…. இணையத்தில் வெளியான வீடியோ…. செம வைரல்….!!!!

இயக்குனர் ரஞ்சித்  ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான “மைக்கேல்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் “மைக்கேல்”. இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இந்து திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கின்றார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் போன்ற பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து   இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் “மைக்கேல்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பசியில இருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ங்குற அவசியமில்ல என்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |