தில்லியில் இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் “செய்திகளின் எதிர்காலம்” எனும் கருத்தரங்கின் மாநாட்டின் தொடக்கவிழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது “தாய்மொழி கண் போன்றது ஆகும். ஆங்கிலம் போன்ற பிறமொழிகள் கண்ணாடி போன்றவை ஆகும். கண் பார்வை இருந்தால்தான், கண்ணாடி வேலை செய்யும். இதனால் தான் நாட்டில் தாய்மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஏனெனில் அவை மக்களின் மொழிகளாகும். நான் மாநிலங்களில் தலைவராக இருந்த போது, உறுப்பினர்களிடம் நீங்கள் விரும்பும் எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம் என நான் கூறுவதுண்டு. முதலாவதாக தாய்மொழி, பிறகு சகோதர மொழி, பின் வேறு எந்த மொழியாக இருந்தாலும் பிரச்னை இல்லை. ஆகவே மக்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனை தான் மக்கள் எளிதில் புரிந்துகொள்வர். அதனால் தான் நான் எங்கு சென்றாலும் தாய் மொழி முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறேன்” என்று பேசினார்.