விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அண்மையில் ஆறாவது சீசன் தொடங்கியது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இரண்டாவது வாரத்திலேயே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. அதாவது வாடி போடி என ஆயிஷாவை அசீம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் 3 போட்டியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது இந்த சண்டை வெடித்தது. ஆயிஷாவை அசீம் பாடி போடி என சொன்ன நிலையில் அவருடன் ஆயிஷா சண்டையிட்டார். ஆயிஷா தொடர்ந்து கூறியும் அவர் அடங்காததால் கோபமான ஆயிஷா தனது ஷூவை கழட்டி அடிக்க செல்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Azeem and Ayeesha#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil https://t.co/BwngauRFmG
— Dr Kutty Siva (@drkuttysiva) October 21, 2022