Categories
அரசியல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும்…. தேங்காய் பர்பி செய்முறை…. இதோ உங்களுக்காக….!!!!

தேங்காய் பர்பி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 2 கப், சர்க்கரை 1 1/2 கப், காய்ச்சிய பால் – 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 10 – பொடியாக நறுக்கியது, ஏலக்காய் பொடி 1/4 ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். அதில் துருவிய தேங்காயை கொட்டி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்க வேண்டும். வறுக்கும் போது தேங்காய் நிறம் மாற கூடாது. தேங்காய் 2 நிமிடங்கள் வதங்கிய பின்பு, தயாராக எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை கொட்டி, அதில் ஒரு கரண்டி அளவு பாலையும் சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கலந்து வேக விடவேண்டும். சர்க்கரை தண்ணீர் விட ஆரம்பிக்கும்.

அடுப்பை சிம்மில் வைத்த பின்னர் தேங்காய் சர்க்கரை பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து கெட்டி பதத்திற்கு வரும். இதனையடுத்து சர்க்கரையிலிருந்து விட்ட தண்ணீர் அனைத்தும் சுண்டி, சர்க்கரை பாகு கூடி அல்வா பதத்திற்கு வரவேண்டும்.

தேங்காய் பர்பி தயாராவதற்குள் இன்னொரு அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பை போட்டு வறுத்து தயாராக வைக்க வேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து தேங்காய் பர்பி தயாரானதும் அடுப்பை அணைத்துவிட்டு வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பையும், ஏலக்காய் தூளையும், பர்பி கலவையோடு சேர்த்து கிலற வேண்டும். ஒரு வட்ட வடிவமான தட்டில் நெய் தடவி, தயாராக இருக்கும் பர்பியை அந்த தட்டில் கொட்ட வேண்டும். ஒரு ஸ்பூனால் சதுரமாக தட்டி, ஒரு கத்தியைக் கொண்டு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி விட வேண்டும். அதன் பின்பு அதை நன்றாக ஆற விட வேண்டும். இப்போது சுவையான பர்பி தயார்.

Categories

Tech |