சமீப காலமாகவே விலங்குகள் செய்யும் செல்ல தனமான சில சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின் போன்றவை மற்ற விலங்குகளை போல இல்லாமல் புத்திசாலித்தனமான உயிரினங்கள். குட்டி யானைகளை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அவை எது செய்தாலும் ரசிகத் தக்க வகையில் தான் இருக்கும்.
குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவரும்.இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் குட்டி யானை ஒன்று ஒரு பெண்ணின் ஆடையை இழுத்து பாடாய்படுத்தும் வீடியோ ஒன்றை இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க