Categories
உலக செய்திகள்

3,037 புகார்கள்… திகைத்து நிற்கும் கனட போக்குவரத்து நிறுவனம்!

கடந்த சில  வாரங்களில் பயணிகளிடமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 15-ஆம் முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 8 வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய அரசு (கனடா) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, விமானம் தாமதமாவது மற்றும் விமானத்தின் கட்டுப்பாட்டிற்குள் ரத்து செய்யப்பட்டதற்கு விமான நிறுவனங்கள் 1,000 டாலர்கள் வரை இழப்பீடாக செலுத்த வேண்டும்.

இருப்பினும், புதிய விதிமுறைகள் இழப்பீட்டை மறுக்கும் போது விமான நிறுவனங்கள் சரியான காரணங்களை வழங்கவில்லை என பல பயணிகள் தங்களது குழப்பத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |