Categories
தேசிய செய்திகள்

ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோ‌….. எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்‌.எல். வி மார்க் 3 ராக்கெட் மூலம் 36 செயற்கை நாளை மறுநாள் இரவில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 வது தளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எயந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட ராக்கெட் ஆகும்.

அதுமட்டுமில்லாமல் வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோளை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்று பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்டன் இன்று இரவு, அதாவது நாளை நள்ளிரவை கடந்த அதிகாலை 12. 7 மணிக்கு தொடங்குகிறது.

Categories

Tech |