தீபாவளி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப்படும் நாள் ஆகும். தீபாவளி கொண்டாட்டங்கள் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் மூலம் தொடங்கும். இது கங்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. எண்ணெயை என்பது ஒருவரிடம் உள்ள ஈகோ மற்றும் பொறாமை போன்ற தீய குணங்களை கழுவதற்கான அடையாளம். குளித்த பிறகு புத்தாடை அணிந்து பூஜை செய்கின்றனர். விழாவுக்காக வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, கோலங்கள், வெற்றிலைகள், காய்கள், பூக்கள் மற்றும் பழங்கள் அலங்கரிக்கப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் தீய சக்திகளை விரட்ட களிமண் விளக்குகளான தீபங்கள் ஏற்றப்படுகிறது. தீமைகளுக்கு எதிரான நன்மையின் வெற்றியை கொண்டாட பட்டாசுகளும் வெடிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள உணவகங்கள் தீபாவளி இனிப்புகளால் நிரம்பி வழியும்.
வட இந்தியாவில் அசுரன் ராவணனை கொன்று 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு ராமர் தனது ராஜ்யத்திற்கு திரும்பியதை கொண்டாடும் ஒரு தருணமாக தீபாவளி கருதப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில், இது அரக்கன் நரகாசுரன் எதிராக கிருஷ்ணர் மற்றும் தேவி சத்தியபாமாவின் வெற்றியாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டம் ஆன்மீக பண்டிகையாகவும் உள்ளது. அதன்படி லட்சுமி குபேர பூஜை, கேதார கௌரி விரதம் மற்றும் அமாவாசை வழிபாடு ஆகியவை மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு வருகின்ற 24-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி வருகிறது. மறுநாள் அம்மாவாசையோடு சேர்ந்து சூரிய கிரகணமும் வருகிறது. எனவே நாம் வழக்கமான வழிபாடுகளை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டியது அவசியம். அதனைத் தொடர்ந்து தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடும்போது, ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் கீழ்காணும் பாடலை பாடி அலைமகளை வழங்கி வழிபடலாம்.
நமோ (அ)ஸ்தம் ஹேமாம்புஜ பீடிகாயை
நமோ (அ)ஸ்து பூமண்டல நாயிகாயை
நமோ (அ)ஸ்து தேவாதிதயாபாராயை
நமோ (அ)ஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை.
அவ்வாறு இல்லை என்றால் கீழ் காணும் துதி பாடலை பாடியும் வழிபடலாம்.
தாயென்று தினம் காக்கும்
தீப லட்சுமியே போற்றி
நோயின்றி வாழவை
தீப லெட்சுமியே போற்றி
வாதைதரும் துயர்தீர்ப்பாய்
தீப லட்சுமியே போற்றி
பாதை காட்டி அருள்புரிவாய்
தீபலட்சுமியே போற்றி போற்றி
இங்ஙகனம் வழிபடுவதால் நமது வறுமைகள் யாவும் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருக்கும், துன்பங்களும் தலைகளும் நீங்கி, திருமகள் அருளால் நம் வாழ்க்கை ஒளிரும். இதனையடுத்து பூஜைகளை எந்தெந்த நேரத்தில் செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
லட்சுமி குபேர பூஜை: 24ஆம் தேதி அன்று மாலை 6.53-8.16 வரை
கேதாரா கௌரி விரதம்: 25ஆம் தேதி அன்று காலை 7:45 முதல் 8.45
அமாவாசை தர்ப்பணம்:25 ஆம் தேதி அன்று பகல் 11 மணிக்குள்
சூரிய கிரகண தர்ப்பணம்: 25ஆம் தேதி அன்று மாலை 4.45 முதல் 5.45 வரை.