Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகள் பழமையான வீடு…. திடீரென நடந்த சம்பவம்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை….!

5௦ ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை.

சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீடு சுமார் 5௦ ஆண்டுகள் பழமையானது என்பதால் வீட்டின் மேல் பகுதியின் சுவர் பலவீனமான நிலையில் விரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென வீட்டின் 2வது மாடியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதனால் அந்த பெண் காயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வீட்டின் மேல் மாடியில் யாரும் வசிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் கவி கணேசன் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு இடிந்து விழுந்த சுவரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் வீடு மிகவும் பழமையாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே இதுகுறித்து புகார் அளித்த நிலையில், மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்க விஜயகுமாருக்கு கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால் அவர் இதுவரையிலும் இடிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அப்பகுதியினர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |