Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தாரேன்..!.. ”ரூ 500,00,00,000 மோசடி” தீக்குளிக்க முயற்சி …. சேலத்தில் பரபரப்பு …!!

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி  பொதுமக்களை ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு சேலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் அழாகாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதி மக்களிடம் பணத்தை இரட்டிப்பாகி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துக்கின்றனர். மேலும் தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை அவர் விற்பனை செய்வதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சிவகுமார் ரியல் எஸ்டேட் , நிதி நிறுவனம் , நெல்லிச்சாறு பாணம் , ஜவுளித் தொழில் என பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றார்.2016 ஆம் ஆண்டு மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட இவர் தற்போது ஜாமினில் இருந்து வருகிறார்.இவரின் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில் , 15 லட்ச ரூபாயை முதலீடு செய்திருக்கின்றேம்.  3 வருஷமாச்சு கேஸ் நடக்கிறது அதனால நிறுத்தி வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். எத்தனையோ பேர் இறந்துள்ளார்கள். எங்களோட வாழ்வாதாரமே போய்விட்டது. இப்போது கூட ஒருவர் மன்னனை ஊத்திட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த அளவுக்கு நாங்க ரொம்ப மனசுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும். பணத்தை வாங்கிட்டு இரட்டிப்பாக திருப்பி திருப்பி தருகிறேன் , பர்னிச்சர் தருகின்றேன் என்று  ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார். பல பகுதி மக்களிடம் இப்படி ஏமாற்றி ரூ 500 கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Categories

Tech |