தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று(மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை சேர்த்து விடுமுறை அளிக்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கோரிக்கையை ஏற்று இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.