இந்தியாவில் 19% மக்கள் சைவ உணவு உண்பவர்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு ஐந்தின் படி தெரிய வந்துள்ளது. மக்கள் தங்களுடைய அன்றாட உணவாக மீன், முட்டை, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் தங்களை சைவ உணவு உண்பவர்கள் என்று கருதுபவர்கள் மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உண்பது இல்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.
மேலும் இந்தியாவிலேயே அதிகமாக சைவ உணவு உண்பவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலும் அதாவது 56.5% மக்கள் அங்கு சைவ உணவு சாப்பிடுகிறார்கள். மிகக் குறைவாக சைவ உணவு உண்பவர்கள் லட்சத்தீவிலும்(0.0%) உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் வெறும் 2.3% பேர்தான் சைவ உணவு உண்கிறார்கள் என்று இந்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.