தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2018 – 2021ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் அறியலாம். கடைசி தேதி: டிச.31. கூடுதல் தகவல் பெற 044 – 28190412, 28190413 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.