Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அத்துமீறும் அசீம்…. செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்த ஆயிஷா…. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது‌. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்தில் இருந்தே ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் அத்துமீரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 10-வது இடத்தில் நிற்கும் அசீம், முதல் இடத்தில் இருப்பதற்கு மகேஸ்வரிக்கும், 6-வது இடத்தில் நிற்பதற்கு விக்ரமனுக்கும், 9-வது இடத்தில் நிற்பதற்கு ஆயிஷாவுக்கும் என்ன தகுதி இருக்கிறது என்கிறார். இதனால் டென்ஷனான ஆயிஷா எப்படி தகுதி இல்லை என்று கூறலாம் என்கிறார்.

இதனால் அசின் மற்றும் ஆயிஷாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் அசீம் ஆயிஷாவை பார்த்து வாடி போடி என்று பேசுகிறார். இதனால் ஆயிஷா வார்த்தையை பார்த்து பேசுங்கள் என்று கூறி எச்சரிக்கிறார். இருப்பினும் அசீம் அடங்காததால் விக்ரமன் குறுக்கிடுகிறார். அவரைப் பார்த்து அசீம் வெள்ளை சட்டை போட்டுக் கொண்டால் நீ ஒன்னும் பெரிய அரசியல்வாதி கிடையாது. நீ டான் கிடையாது என்றெல்லாம் கூறுகிறார். உடனே விக்ரமன் வார்த்தையை பார்த்து பேசுங்கள் என்கிறார்.

ஆனால் அசீம் அடங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா கழட்டி கழட்ட அடிக்கப் போகிறார். அப்போது சகப் போட்டியாளர்கள் ஓடி வந்து ஆயிஷாவை தடுத்து நிறுத்தினர். மேலும் இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசின்கள் பலரும் கடந்த பிக் பாஸ் சீசன்களே பரவாயில்லை என்றும் தற்போது முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது என்றும் விளாசி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by சரண் (@saran.memes)

Categories

Tech |